பள்ளிபடைப் படலம் - 2226
பரதன் சத்துருக்கனிடம் கூறல் (2226-2227)
நகரை நோக்கிய பரதன் வினா
2226.
அன்ன தன்மை அக நகர் நோக்கினள்,
பின்னை, அப் பெரியோர்தம் பெருந்தகை,
‘மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?
என்ன தன்மை? இளையவனே!’ என்றான்.
அப் பெரியோர்தம் பெருந்தகை-அறிவு ஒழுக்கங்களாற் சிறந்த
பெரியோர்களாற் போற்றப்படும் பெருமையுடைய குணத்தாற் சிறந்த
பரதன்; அன்ன தன்மை - மேற்கண்ட தன்மையுடைய;அகநகர் -
நிலைகெட்டநகரின் உட்பகுதியே; நோக்கினன் - பார்த்தான் (சிந்தித்தான்);
பின்னை - பிறகு;(சத்துருக்கனனை நோக்கி)இளையவனே!- தம்பியே;
ஈது - இவ் அயோத்தி; மன்னன்வைகும் வளநகர் போலும்- தயரத
மன்னன் வீற்றிருந்த ஆட்சி செய்யும் வளமான நகராகவாஉள்ளது?.
என்ன தன்மை - எந்தத் தன்மையை உடையதாய்உள்ளது; என்றான் -.
நகர் அகம் என்பது அகநகர் என மாறியது. அரசன் இல்லாத நகரம்
போல உள்ளது என்றான்.‘போலும்’ என்றது ஐய வினா? முன் ஏழு
பாடல்களாற் சொல்லிய நகரின் அழகிழந்த தோற்றத்தைஇச்செய்யுளில்
‘அன்ன தன்மை’ என்பது குறிப்பிடும். 36
