பல்லி

பல்லி

bookmark

பல்லி

பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாக்கால் துழாவி மோப்பம் பிடிக்கின்றன.

பெரும்பாலானவை எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாலைத் துண்டித்துக் கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. அதற்காகவே வால் மட்டும் உடலின் நிறத்தைவிட பளிச்சென்று இருக்கும். சில வாரங்களுக்குள்ளேயே துண்டான வால் மீண்டும் வளர்ந்துவிடும்.

வண்ணங்களைப் பார்ப்பதற்கான பார்வைத் திறனும் உண்டு.

இவற்றிற்க்கு பாதங்களும் வெளிக் காதுகளும் உண்டு.

பல்லி வகைகளில் மரப்பல்லிக்கு மட்டுமே குரல் நாண் உண்டு.

இவை குளிர்ந்த இரத்தம் கொண்ட விலங்குகள், அதாவது அவை உடலை சூடேற்ற உதவும் சூழலை நம்பியுள்ளன. அவர்கள் உடல் வெப்பநிலையை உயர்த்த சூரியனின் வெப்பத்தைப் பயன்படுத்துகின்றன மற்றும் அவர்களின் உடல்கள் சூடாக இருக்கும்போது செயலில் இருக்கும்.

மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள உடல் சைகையையே பல்லிகள் பயன்படுத்தும். அத்துடன் உடல் நிறங்களை மாற்றியும் தகவல்களைப் பகிரும். எதிரிக்குப் பளிச்செனத் தெரியும் வண்ணங்களைச் செதில்களால் தேவைக்கேற்ப மறைத்துக்கொள்ளும்.