பரிசோதகர்:
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் வாபர் எனும் இஸ்லாமியர் ஒருவர் வசித்து வந்தார். கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து வழிப்பறி செய்து அதனை ஏழைகளுக்கு கொடுத்தார். அப்பகுதியை ஆண்ட அரசரால் அவரை பிடிக்கமுடியாததால், வாபரின் செயலுக்கு முடிவு கட்டும்படி ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். பாலகனாக இருந்த ஐயப்பனின் பேச்சை வாபர் கேட்பதாக இல்லை. எனவே அவரை வதம் செய்ய சென்றார் ஐயப்பன். அவரிடம் வாபர், "என்னைக் கொன்றால் என்னை நம்பியிருக்கும் மக்களுக்கு யார் ஆதரவு?' என்றார். அவர்களை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ஐயப்பன், அவருக்கு பரிசோதிக்கும் பணியையும் கொடுத்தார்.
சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கு விபூதியை பிரசாதமாக தருவது சிறப்பு.
