நெருப்புக்கோழி

நெருப்புக்கோழி

bookmark

நெருப்புக்கோழி

தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி வாழும் பறவைகளுள் மிகப்பெரியது 

இவற்றால் பறக்க முடியாது.

உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடிய பறவை.

இவை மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது. மனிதரைக்கூடச் சுமந்துகொண்டு ஓடும் அளவுக்கு வலுவுள்ளது. 

இதன் கால்களில் 2 விரல்கள் உள்ளது. அதில் ஒரு விரலில் மட்டுமே நகம் உள்ளது.

இதன் இறக்கையின் முடிவில் இரண்டு கொக்கிகள் போன்ற நகங்கள் இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.

இவை தண்ணீர் குடிப்பதில்லை.

இவற்றிற்க்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது.

உலகிலேயே மிகப் பெரிதாக முட்டை இடுவது நெருப்புக்கோழிகள்தான். முட்டை 1.4 கிலோ எடையும் 15 செ.மீ அளவும் கொண்டது. இந்த முட்டை 2 டஜன் கோழி முட்டைகளுக்குச் சமம்.