நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம்

bookmark

1) "என் மனைவி ரொம்ப நல்லவ."

"அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே?"

"அவ நல்லவனு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகுதான் தெரியுது."

பா.ஜெயக்குமார்.

2) "மாப்ளே! நேத்து பஸ்ல வரப்ப என் பாக்கெட்டுல ஒருத்தன் "பிளேடு" போட்டுட்டான்."

"அச்சச்சோ! அப்புறம்?"

"என்ன பண்றது? அந்த பிளேடை எடுத்துக்கிட்டேன்."

ஸ்ரீனிவாசன்.

3) "தலைவரை விளையாட்டுப் போட்டிக்குத் தலைமை தாங்க கூப்பிட்டது தப்பு!"

"ஏன்?"

"நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்துல எவ்வளவு தூரம் ஓடணும்"னு கேட்கறாரு!"