நாய்
நாய்
மனிதர்களிடம் உள்ள மோப்ப சக்தியை விட இவற்றின் மோப்ப சக்தி கிட்டத்தட்ட 10000 முதல் 100000 மடங்கு அதிகமானதாகும்.
இவை மனிதர்களின் உணர்வுகளை கூட அவைகளின் மோப்ப சக்தியின் மூலம் அறிந்து கொள்ளும் அசாத்திய திறன் உடையவை ஆகும்.
அதுமட்டுமில்லாமல் மனிதர்களுக்குள் இருக்கும் கேன்சர் உள்ளிட்ட நோய்களையும் மோப்ப சக்தியின் மூலம் தெரிந்து கொள்ளும் திறன் இவற்றிற்க்கு உண்டு.
ஒரு சராசரியான நாய் ஒரு மணி நேரத்தில் 19 மைல்கள் வரை ஓடும் திறன் உடையது ஆகும்.
நாய்கள் அவைகளின் பாதங்கள் மற்றும் மூக்கின் வழியாக மட்டுமே வியர்வையை வெளிப்படுத்தும். இதை தவிர நாய்களின் மற்ற உடல் பகுதிகளில் வியர்வை சுரக்காது.
நாய்க்குட்டிகள் ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரங்கள் வரை தூக்கத்துக்காக மட்டுமே செலவு செய்யும்.
மனிதர்களுக்கு கைரேகைகளில் வித்தியாசம் இருப்பது போலவே இவற்றின் மூக்கு ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லை.
இரவு நேரத்தில் மனிதர்களின் பார்வைத் திறனை விட இவற்றின் பார்வைத்திறன் அதிகமானதாக இருக்கும்.
சராசரி உடல் வெப்பநிலை 101.2 டிகிரி.
நாய்க்கு மனிதர்களை விட அதிக சக்தி கொண்ட செவிப்புலன் உள்ளது, மனிதர்களை விட நான்கு மடங்கு தூரத்தில் உள்ள ஒலிகளைக் கேட்கும் திறன் கொண்டது நாய்கள்.
இவற்றால் மனிதர்கள் பேசும் வார்த்தைகளில் 1000க்கும் மேற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும்.
சராசரியாக ஒரு நாயின் அறிவுத்திறனானது, ஒரு 2 வயது குழந்தையின் அறிவுத் திறனுக்கு ஈடானது.
நாய் குட்டிகளுக்கு 28 பற்கள் இருக்கும். வளர்ச்சியடைந்த நாய்களுக்கு 42 பற்கள் இருக்கும்.
நாய்க்குட்டிகளுக்கு பிறக்கும் போது கண் காணாது, காது கேட்காது, பல் இருக்காது.
