நாட்டுப் படலம் - 92

bookmark

கோசலநாடு ஊழிபேரினும் பேராச்சிறப்பினதனெல்

92.

வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.
 
வீடு  சர  நீர்வேலை  கால்மடுத்து  ஊடு  பேரினும்  -  நிலம்
முழுவதும்  அழியுமாறு  கடல் பெருங்காற்றால் மோதுண்டு   வந்தாலும்;
உலைவு இலா-அழியாத; நலம் கூடும் ‘கோசலம்’ என்றும் கோதிலா
நாடு  கூறினாம்  -  நன்மைகள்  சேர்ந்த  கோசலம் என்று குற்றமற்ற
நாட்டின்  சிறப்பைச்  சொன்னோம்;  நகரம் கூறுமாம் -  (இனி) அந்த
நாட்டின்     தலைநகரான    அயோத்தி    மாநகரின்     சிறப்பைச்
சொல்லுவோம்.

வீடு  (விடுதலை)    -    முதனிலைத்    தொழிற்பெயர்.    நாடு,
நகரம்-ஆகுபெயர்கள்.                                      61