நாட்டுப் படலம் - 74

bookmark

அந்நாட்டு அலர்வன இவை எனல்

74.

இடைஇற மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.
 
இடை இற, மகளிர்கள் எறிபுனல் மறுக, குடைபவர்-தங்கள இடை
ஒடிவது  போலத்  தோன்றும்  பெண்கள்  அலையடிக்கும்  நீர்  கலங்க
நீராடுபவர்களின்;  துவர்  இதழ்  என  -  பவளம்  போன்ற  சிவந்த
உதடுகளைப்   போல;   குமுதம்   மலர்வன   -   குமுத  மலர்கள்
மலர்வனவாகும்;  மடைபெயர்  அனம்  என-  நீர்மடைகளில் வாழும்
அன்னங்களைப்  போல; மடநடை அளகம் - மெல்லிய  நடையையும்,
அழகிய  கூந்தலையும்  உடைய;  கடைசியர்  முகம் என- அந்நாட்டு
உழத்தியரின்  முகம்  போல;  கமலம்  மலர்வன - தாமரை மலர்கள்
மலர்வனவாகும்.

குமுதம்     பெண்களின் வாயிதழ்களைப் போல மலர்ந்தன. தாமரை
உழத்தியரின்   முகம்   போல   மலர்ந்தன   என,     உவமானத்தை
உவமேயமாகக் கூறியதால் ‘எதிர்நிலையணி’ யாகும்.               43