நாட்டுப் படலம் - 66
66.
சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர, கன் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே.
காம்பு கால் பொர- மூங்கில் புதரில் காற்று மோதுதலால் (தேன்கூடு
சிதைய); கண் அகல் மால் வரை- விசாலமான பெரிய
மலைகளிலிருந்து; பாம்பு நான்றென- பாம்புகள் தொங்குவது பொன்ற
தோற்றத்துடன்; பாய் பசுந் தேறல்- பாய்கின்ற புதிய தேன்
ஒழுக்கினையே; சேம்பு கால் பொர- சேப்பங் கொடியின் மடல்கள்
ஒடியும்படி; செங்கழுநீர்க் குளத் தூம்பு கால்- செங்கழு நீர்ப் பூக்கள்
கொண்ட குளத்தின் மதகுகளிலிருந்து பரவும் வாய்க்கால்களில்; கரி
வளை மேய்வன- வளைந்த சங்குகள் மேய்கின்றன.
‘பசுந் தேறலைச்’ கரி வளை மேய்வன’ எனக் கூட்டிப் பொருள்
கொள்க. தூம்பு மதகு, மூங்கில் காற்றில் ஆடும்போது மலையில்
தொடுத்த தேனடைசிதைந்து தேன் சொரிகிறது. தேனின் தாரை பாம்பு
தொங்குவது போல் இருக்கிறது. மலை உச்சியிலிருந்து சொரியும் தேன்,
சேம்பு ஒடியும்படி வேகமாகப் பாய்ந்து வர, அத் தேனைச் சங்கு
மேய்கிறது. உயர்வு நவிற்சிதான்; எனினும், சுவையான கற்பனை. தேறலே;
பிரிநிலை ஏகாரம்; அப்படி வரும் தேனைத் தவிர வேறு எதனையும்
சங்கு உண்ணவில்லை என்பது பிரிநிலை ஏகாரக் குறிப்பு. 35
