நகர் நீங்கு படலம் - 1923
சீதையின் மாற்றம்
1923.
கொற்றவன் அது கூறலும், கோகிலம்
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,
‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே’
என்- துறந்தபின், இன்பம் கொலாம்?’ என்றாள்.
கொற்றவன் - அரசனாகிய இராமன்; அது கூறலும் - அச்சொல்
சொல்லுதலும்; கோகிலம் செற்றது அன்ன குதலையள் - குயில் கோபம்
கொண்டது போன்றகுதலைப் பேச்சினை உடைய சீதை; சீறுவாள் -
கோபித்து; ‘உற்ற நின்ற துயரம் இது ஒன்றுமே? - உம்மை அடைந்து
நின்ற துன்பம் நான் உடன் வருவதாகிய இது ஒன்றுதானோ; என் துறந்த
பின் இன்பம் கொல்’ - என்னை இங்கேயே விட்டு விட்டுப் போனபிறகு
காட்டில் உங்களுக்கு இன்பமே உண்டாகும் போலும்;’ என்றாள் -.
குதலை - பொருள் தெரிந்து சொல் தெரியாதது. ‘ஆம்’ உரையசை.
‘கொல்’ ஐயம். 228
