நகர் நீங்கு படலம் - 1918
இராமன் சிந்தனை
1918.
அண்ணல், அன்ன சொல் கேட்டனன்; அன்றியும்,
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;
கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன்,
எண்ணுகின்றனன், என் செயற்பாற்று?’ எனா,
அண்ணல் - இராமன்; அன்ன சொல் கேட்டனன் - அவள்
சொன்ன அத்தகையவார்த்தையைக் கேட்டான்; அன்றியும் - அதன்
மேலும்; உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் - அவள் மனத்தில்
தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின்நீர்க்கடல்-
உடன்படாதவனாய்; ‘என்செயற்பாற்று’ எனா - செய்தற்குத்தகுதியானது
யாது என்று; எண்ணுகின்றனன் - சிந்திப்பானானான்.
‘அயோத்தியில் உள்ள கண்ணீர்க் கடலின் இடையே அவளைக்
கைவிட உடன்படாது’ என்றும்பொருள் கூறலாம். சொல்லும் சிந்தனையும்
ஒன்றாக இருப்பது உணர்ந்து சிந்திப்பான் ஆயினன்இராமன். 223
