நகர் நீங்கு படலம் - 1884
1884.
‘முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை,
மழுக்களின் பிளத்தும்’ என்று, ஓடுவார்; வழி
ஒழுங்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து, இடர் உற்றார் - சிலர்
சிலர் -; “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை - பெரிய
கல்லைப் போலவலியதாக உள்ள நமது கடு மனத்தை; மழுக்களின்
பிளத்தும்’ - கோடரியால்இரண்டாக்குவோம்;’ என்று ; ஓடுவார் -
ஓடுகின்றார்கள்; வழி ஒழுக்கியகண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை -
வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கியநீர்ப்பெருக்காகிய
ஆற்றின்கண்; இழுக்கலில் - சேற்றில்; வழுக்கி வீழ்ந்து- சறுக்கி
விழுந்து; இடர் உற்றார் - துன்பம் அடைந்தார்.
கலின் - கல்லின் என்பதன் விகாரம். மழு - கோடரி. ஒடுகின்றவர்
தமது கண்ணீர் ஆற்றுச் சேற்றில் வழுக்கி, வீழ்ந்தார்கள் என்பதாம்.
இழுக்கல் - சேறு. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ என்னும் குறள்
காண்க. (குறள். 415.) 189
