நகரப் படலம் - 163

bookmark

கோபுர மதில்களின் உயர்வு

163.

வன் தோரணங்கள் புணர் வாயிலும். வானின் உம்பர்
சென்றுஓங்கி. ‘மேல்ஓர் இடம் இல்’ எனச் செம்
                               பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளோர் குணம் கூட்டு இசைக் குப்பை
                                      என்ன-
ஒன்றோடு இரண்டும். உயர்ந்து ஓங்கின. ஓங்கல் நாண.
 
வன் தோரணங்கள் புணர் வாயிலும்-வன்மையான  தோரணங்கள்
பொருந்திய வாயில்களும்; செம்பொன்  இஞ்சி   ஒன்றோடிரண்டும்-
செம்பொன்னால்  அமைந்த  மதில்கள்  ஒன்றோடிரண்டாகிய  மூன்றும்;
வானின் உம்பர் சென்று ஓங்கி-வானத்தின்  மேலே சென்று உயர்ந்து;
மேல்  ஓர்  இடம்  இல்  என  -  அதற்கு  மேலே   செல்ல ஒரு
இடமும்   இல்லை என்பதால்; குன்று  ஓங்கு   தோளோர் -  மலை
போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின்;  குணம் கூட்டு
இசைக்  குப்பை  என்ன-  சிறந்த  குணங்களுடன் கூடிய  நட்புள்ளம்
புகழ்த்  தொகுதி  ஆகிய  நல்ல  பண்புகள்   உயர்ந்திருப்பது  போல;
ஓங்கல்  நாண  உயர்ந்தோங்கின-  வாயில் மதில்  ஆகியவைகளின்
உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.

‘இஞ்சி ஒன்றோடிரண்டு’ என்பதற்கு அக நகர்.  இடை நகர்.  புறநகர்
மதில்கள்  மூன்று  என்பது  கருத்து.  கூட்டு:   நட்பு.   இசைக்குப்பை:
புகழ்த்  தொகுதி.  ஓங்கல்:  மலை.  இஞ்சி:  மதில்.   70.  71. இரண்டு
பாடல்களாலும்    கொடிகளும்.   தோரண   வாயிலும்    சிறப்பித்துக்
கூறப்பட்டன.                                              71