நகரப் படலம் - 158

bookmark

மகளிர்சிலர் பொழுதுபோக்கும்

 நகரத்தார் பொழுதுபோக்கு
 
158.

ஊடவும். கூடவும். உயிரின் இன் இசை
பாடவும். விறலியர் பாடல் கேட்கவும்.
ஆடவும். அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும். பொழுது போம்- சிலர்க்கு. அத் தொல்நகர்.
 
அத்தொல்நகர் சிலர்க்கு - அந்தப் பழமை வாய்ந்த   நகரத்திலே
வாழும்   சிலர்க்கு;  ஊடவும்  கூடவும் -  காதலர்களோடு    ஊடல்
கொள்ளும்   ஊடல்   தீர்ந்து  கூடி  இன்புற்று  மகிழவும்;   உயிரின்
இன்னிசை பாடவும் - உயிரினும்  சிறந்ததான  இனிய    இசை  பாடி
மகிழவும்;   விறலியர்  பாடல்  கேட்கவும் -   இசையில்     வல்ல
விறலியர்களைப்   பாடச்செய்து.   அதனைக்  கேட்கவும்;   ஆடவும்-
இசைக்கேற்ப  நடனம்  ஆடவும்;  அகன்புனல்  ஆடி-    இடமகன்ற
நீர்நிலைகளிலே நீராடவும்;  அம்மலர்  சூடவும்    பொழுதுபோம்-
அழகிய மலர்களை அணிந்து மகிழவும் ஆகிய   செயல்களால் பொழுது
போகும்.

ஊடுதல்-     கூடி மகிழ்தல்- பாடுதல்- பாடல் கேட்டல்.   சூடுதல்-
புனலாடல்-  மலர்  சூடல்  ஆகிய செயல்களால் சிலருக்குப்   பொழுது
போகும்; போம்: போகும் என்பதன் தொகுத்தல் விகாரம்.          66