நகரப் படலம் - 153
வாச்சிய ஒலிகள் கடலொலியை வென்றமை
153.
வளை ஒலி. வயிர் ஒலி. மகர வீனையின்
கிளை ஒலி. முழவு ஒலி. கின்னரத்து ஒலி.
துளை ஒலி. பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி.- கடல் ஒலி மெலிய. விம்முமே.
வளை ஒலி வயிர் ஒலி- (அந்த நகரமெங்கும்) சங்குகளின் ஓசை.
கொம்புகளின் ஓசை; மகர வீணையின் கிளை ஒலி- மகர யாழ்
இனங்களின் ஓசை; முழவு ஒலி கின்னரத்து ஒலி- மத்தள ஓசை.
கின்னர ஓசை; துளை ஒலி- துளைக் கருவிகளான புல்லாங்குழல்
முதலியவைகளின் ஓசை; பல்இயம் துவைக்கும்- மற்றும் பலவகை
வாத்தியங்கள் முழக்கும்; சும்மையின் விளைவு ஒலி- ஆரவாரத்தின்
விளைவாக உண்டாகும் ஓசை; கடல் ஒலி மெலிய விம்மும்- (ஆகிய
இவ்வோசைகள் எல்லாம்) கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.
அயோத்தி நகரமெங்கும் சங்கு முதலியவைகளின் ஒலி. கடல்
முழக்கம் கீழ்ப்பட மேலோங்கி முழங்கும் என்கிறார். வளை: சங்கு.
வீணையின் கிளை: வீணையின் இனம். கின்னரம்: ஒருவகை யாழ்.
துளை: துளைக் கருவிகள் (ஆகுபெயர்). சும்மை: பேரொலி.
துவைக்கும்: முழக்கும். 61
