நகரப் படலம் - 151
அயோத்தி நகரின் ஆவண வீதிக்கு
அளகாபுரி தோற்றது எனல்
151.
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி. இந் நகர்
ஆவணம் கண்டபின். அளகை தோற்றதே!
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத - சிறந்த நகரங்களின்
வரிசையிலே அயோத்தி நகருடன் சேர்ந்து எண்ணப்படாத; அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?- அந்தத் தேவர் நகரமான
அமராவதியை இந்த நகருக்கு இணையோ. அல்லவோ என்று எடுத்துச்
சொல்வது எதற்கு?; யாவையும் வழங்கு இடத்து இகலி - எல்லா
வளங்களையும் தரும் விதத்திலே வேறுபட்டு விளங்குவதோடு; இந்நகர்
ஆவணம் கண்டபின்- இந்த நகரத்துக் கடைத் தெருவைப் பார்த்த
பிறகு; அளகை நோற்றது - செல்வம் மிக்கதென்னும் அளகாபுரியே
தோல்வியுற்றது.
அயோத்தி நகரின் கடைத் தெருவைப் பார்த்து. அளகாபுரியே
தோற்றது என்னும் போது. சிறந்த நகரங்களின் வரிசையிலே
கூறப்படாததான அமராவதியை அயோத்திக்கு ஒப்போ? அல்லவோ?
என்று வினாவுவது எதற்காக? கோவை: வரிசை. நிரல். அமராவதி
குறிப்பிடப்படவில்லை என்பதால் “எண் குறிக்கலா” என்றார். 59
