நகரப் படலம் - 122
122.
சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண்இல் கோடியே.
சந்திர காந்தத்தின் தலத்த- சந்திர காந்த்க் கற்கள் பரப்பிய
தரையை உடையனவும்; சந்தன பந்தி செய்தூணின் மேல்- சந்தன
மரங்களான வரிசையாக உள்ள தூண்களின் மீது; பவளப் போதிகை-
பவளத்தால் செய்த போதிகையில்; செந்தனி மணித் துலாம் செறிந்த-
சிவந்த மாணிக்கத்தாலான உத்தரம் பொருந்திய யுள்ளனவும்; திண்
சுவர் இந்திர நீலத்து- வண்மை மிக்க சுவர்கள் இந்திர நீலமணிகளால்
அமைந்தனவுமான மாளிகைகள்; எண்ணில் கோடி- எண்ணமுடியாத
கோடியாகும்.
சந்திர காந்தம்: சந்திரஒளி பட நீர் பொழியும் தன்மையுடைய கல்
தலத்த, செறிந்த என்ற எச்சங்கள் தலத்தன. செறிந்தன என்று
பொருள் உடைய பெயர்ச்சொற்கள். பந்தி: வரிசை. 30
