தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
விளக்கம் :
இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டவன்,இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றார்கள்.