தைலம் ஆட்டு படலம் - 1992
கலிநிலைத்துறை
1992.
‘தானே! தானே! தஞ்சம்
இலாதான், தகைவு இல்லான்,
போனான்! போனான்! எங்களை
நீத்து, இப்பொழுது’ என்னா,
வான் நிர் கண்டி மண் அற
வற்றி, மறுகுற்ற
மீனே என்ன, மெய்
தடுமாறி விழுகின்றாள்.
‘தஞ்சம் இலாதான் - எளிமை இல்லாதவனும்; தகைவு இல்லான் -
எவற்றாலும்தடுக்க முடியாத பெரு வலிமை படைத்தவனும் ஆகிய தயரதன்;
தானே! தானே - தனியாக; எங்களை நீத்து - எங்களை யெல்லாமல்
கைவிட்டு; இப்பொழுது போனான்! போனான்!’ -;என்னா - என்று
சொல்லி; வான் நீர் சுண்டி - மழை நீர் இல்லாமல்போய்; மண் அற
வற்றி - மண்ணிலும் நீர் இல்லாமல் வறவி; மறுகுற்ற - கலங்குதல்
அடைந்த; மீனே என்ன - மீனைப் போல (உயிர் ஊசலாட); மெய்
தடுமாறிவிழுகின்றாள் - உடம்பு நடுங்கி விழுகின்றாள்.
மேல் நீரும்கீழ் நீரும் இல்லாத பொழுது மீன் உயிர்வாழ இயலாமல்
தடுமாறுதல் போல,தசரதனை இழந்தும், இராமனைப் பிரிந்தும் கோசலை
தடுமாறினான் என்றார். அடுக்குகள்அவலத்தின்கண் வந்தன. தஞ்சம். -
பற்றுக் கோடு எனப் பொருள் கொண்டு, பற்றுக்கோடுஅற்றவனாய்ப்
போனான் எனக் கூறி, இராமனாகிய பற்றுக்கோட்டை இழந்தபடியால்
என்பதும்ஒன்று. தஞ்சம் எண்மைப்பொருட்டாதலை. “தஞ்சக் கிளவி
எண்மைப் பொருட்டே” என்பதனால் (தொல். சொல். 268) அறிக. இஃது
இடைச்சொல். 63
