தைலம் ஆட்டு படலம் - 1990
கோசலை வருந்திப் புலம்புதல் (1990-1994)
தயரதன் பிரிவால் கோசலை புலம்பல்
1990.
‘உயிர்ப்புஇலன், துடிப்பும் இல்லன்’
என்று உணர்ந்து, உருவம் தீண்டி,
அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு
ஆர் உயிர் இன்மை தேறி,
மயில் குலம் அனைய நங்கை
கோசலை மறுகி வீழ்ந்தாள் -
வெயில் சுடு கோடைதன்னில்
என்பு இலா உயிரின் வேவாள்.
குலம் மயில் அனைய நங்கை கோசலை - சிறந்த மயிலை ஒத்த
பெண்ணாகியகோசலையானவள் ‘உயிர்ப்பு இலன்; துடிப்பும் இல்லன்’
என்று் உணர்ந்து - தசரதனுக்குமூச்சு இல்லை துடிப்பும் தொட்டு;
அயிர்த்தனள் நோக்கி - ஐயுற்றுப் பார்த்து; மன்னற்கு - தசரதனக்கு;
ஆர் உயிர் இன்மை தேறி - அரிய உயிர் இல்லை என்பதுதெளிந்து;
வெயில் சுடு கோடைதன்னில்- வெள்ளில் சுடுகின்ற கோடைக் காலத்தில்;
என்பு இலா உயிரின் - எலும்பு இல்லாத (புழு முதலிய) பிராணிகள் போல;
வேவாள் -வெந்து; மறுகி - மனம் சுழன்று; வீழ்ந்தாள் - விழுந்தாள்.
இறுதியடியின் சொல்லாட்சியை ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே
என்பதனோடு(குறள்.77.) ஒப்பிடலாம். 61
