தைலம் ஆட்டு படலம் - 1965
1965.
‘ “ஏழ் - இரண்டு ஆண்டும் நீத்து,
ஈண்ட வந்து உனைத்
தாழ்குவென் திருவடி;
தப்பிலேன்” எனச்
சூழி வெங் களிற்று இறை
தனக்குச் சோர்வு இலா
வாழி மா தவன் சொலால்
மனம் தெருட்டுவாய்.
‘ஏழ் இரண்டு ஆண்டும் நீத்து - பதினான்னு ஆண்டுகளும் கழித்து;
ஈண்ட வந்து -விரைவாக வந்து; உனைத் திருவடி தாழ்குவென் -
உனது திருவடிகளை வணங்குவேன்; தப்பிலேன் - தவற மாட்டேன்’;
என - என்று; சூழி - முகபடாம் அணிந்த; வெங்களிற்று இறை
தனக்குக் - கொடிய யானையை உடைய தயரத மன்னனுக்குச் சொல்லி;
சோர்வு இலா - தளர்ச்சி இல்லாத; மாதவன் சொலால் - வசிட்ட
முனிவன்சொல்லால்; மனம் தெருட்டுவாய் - மனத்தைத் தெளிவிப்பாய்.’
‘வாழி’ அசை. 36
