தைலம் ஆட்டு படலம் - 1946
இராமன் சுமந்திரன்பால் தேரைத்
திருப்பிக்கொண்டு செல்லுமாறு வேண்டல் (1946-1947)
இராமன் சுமந்திரனைத் தேருடன் ஊர் திரும்பக் கூறல்
1946.
ஏனையரும் இன்னணம்
உறங்கினர்; உறங்கா
மானவனும், மந்திரி
சுமந்திரனை, ‘வா’ என்று,
‘ஊனம் இல் பெருங் குணம்
ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு; அவ் உரை
கேள்’ என விளம்பும்;
ஏனையரும் - மற்றவர்களும்; இன்னணம் - இவ்வாறு; உறங்கினர்-
துயின்றார்கள்; உறங்கா மானவனும் - தூங்காத பெருமை உடைய
இராமனும்; மந்திரிசுமந்திரனை - அமைச்சனாகிய சுமந்திரனை; ‘வா’
என்று - வருக என அழைத்து; ’ஊனம் இல் பெருங்குணம் ஒருங்கு
உடைய உன்னால் - குற்றம் அற்ற பெரிய நற்பண்புகள் ஒருசேரப்
பெற்றுள்ள உன்னால்; மேல் நிகழ்வது உண்டு - இனிச் செய்ய
இருப்பதாகிய செயல்உள்ளது; அவ் உரை கேள்’ - அந்தச் சொற்களைக்
கேட்பாயாக; என விளம்பும் -என்று சொல்லுவான்.
தேர் ஓட்டுபவனாகவும் தசரதனுக்கு முதல் அமைச்சனாகவும்
உள்ளவன் இச் சுமந்திரன்.சுமந்திரன் என்பது மந்திரத் தலைமையில்
உள்ளார் அனைவரையும் பொதுவாகக் குறிக்கவும்வரும். 17
