திருடனோட சம்சாரம்

bookmark

ஒருவன்: எங்க வீட்டில எதுவும் எங்கப்பா சொன்னதுதான் முடிவு...!

மற்றவன்: கரெக்டா சொல்லிடுவாரா?

ஒருவன்: ஆமாம்! ராத்திரியிலேயே எங்கம்மா கிட்ட கேட்டு வைத்துக்கொள்வார்...!

"திருடனோட சம்சாரம், திருடனைத் திட்டறா..".

"ஏன்... திருந்த மாட்டேங்கறானா?"

"இல்ல... திருட மாட்டேங்கறானாம்..!"

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?

கணவன்: எனக்கு பொண்ணு பார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான் அவன்!!

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா, கூந்தலா, என் கண்களா.. எதுங்க?

கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு.

மனைவி: என்னங்க, அதோ குடிச்சிட்டு தள்ளாடிக்கிட்டே போறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு!

கணவன்: அவன் கொடுத்து வச்சவன், அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா கொண்டாடிட்டிருக்கானேன்னுதான் ஆச்சர்யமா இருக்கு!