திரு அவதாரப் படலம் - 315

bookmark

உலகம்புகழ் , தம்பியர் ஏத்த
இராமன் இனிது வாழ்தல்

315.

இப் பரிசு. அணி நகர் உறையும் யாவரும்.
மெய்ப் புகழ் புனதைர. இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற.
முப் பரம் பொருளுக்கு முதல்வன் வைகுறும்.
 
இப்பரிசு அணி நகர் உறையும் யாவரும்- இந்த விதமாக  அந்த
நகரத்தில் வாழும் எல்லோரும்; மெய்ப்புகழ் புனைதர -உண்மையான
புகழைக்  கூறிக்  கொண்டாடலும்; இளைய வீரர்கள் தப்பு அற அடி
நிழல்  தழுவி  ஏத்துற  - வீரர்களான  தம்பியர்  மூவரும் ராமனது
திருவடிகளைத்  தவறாது  துதிக்கவும்; முப்பரம் பொருளுக்கு - அரி.
அயன்.  அரன்  எனும்  முக்கடவுளர்க்கும். முதல்வன்  வைகுறும்-
முதல்வனான ராமபிரான் வாழ்வானாயினான்.

பரிசு:     தன்மை.  அணிநகர்.   அழகான   நகரம்  (அயோத்தி).
மெய்ப்புகழ்:  மெய்க்கீர்த்தி. புனைதர: விரித்துக் கூற:  ஏத்துற:  துதித்து
வணங்க.  ‘’மூன்று  கவடாய்  முளைத் தெழுந்த மூலம்’’  ‘முத்தேவரின்
முதற்   பொருள்’  என்று  பின்னும்  கூறுவர்.  பாடல்   எண்  28-ஐ
இப்பாடலுடன்    ஒப்பிடுக.   மூலப்   பரம்பொருள்    இம்மூவரினும்
வேறுபட்டவர் என்பதே கம்பன் கருத்து.                       134