திரு அவதாரப் படலம் - 296

bookmark

296.    

சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து. தையலார்
பந்தியில். சிவறியால் சிதற. பார்மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே.
 
சுந்தரப் பொடி- மணப் பொடி; பொற்சுண்ணம் - பரிமளப் பொடி;
தையலார்  - பணிப்  பெண்கள்;  பந்தியில்  - வரிசையில்; சிவிறி -
விசிறி; இந்திரவில் - வானவில்; பார்மிசை - தரை மேல்.       115-1