திரு அவதாரப் படலம் - 292

bookmark

292.

‘ஆலையும் புதுக்கு; அந்தணாளர்தம்
சாலையும். சதுக்கமும். சமைக்க. சந்தியும்;
காலையும் மாலையும். கடவுளர்க்கு. அணி
மாலையும் தீபமும். வழங்குக’ என்றனன்.
 
ஆலையம்    புதுக்குக  - கடவுளர்   கோவில்களை   எல்லாம்
புதுப்பியுங்கள்;  அந்தணாளர் தம் சாலையும் சதுக்கமும் சமைக்க -
அறவோர் சாலைகளையும் நாற்சந்திகளையும் அமையுங்கள்; காலையும்
சந்தியும்   மாலையும்   -  அந்தி  நேரம்.  காலை.  மாலை ஆகிய
வேளைகளில்;   கடவுளர்க்கு   அணிமாலையும்  தீபமும் வழங்குக
என்றனன்  -  கோயில்களில்  உள்ள  தெய்வங்களுக்கு அழகிய மலர்
மாலைகளும் தீபங்களும் வழங்குங்கள் என்றான்.

ஆலையம்:    கோவில் (தேவாலயம்). புதுக்குக. சமைக்க. வழங்குக
என்பன  வியங்கோள்  வினைமுற்றுகள்.  சதுக்கம்:  நாற்சந்தி.   சந்தி:
இருபொழுது  கூடும்  காலம்;  காலைச்சந்தி.  மாலைச்சந்தி.   என்பன.
வழங்குக.  மிகுதியாகக் கொடுங்கள் என்பது குறிப்பாகும்.  அணிமாலை:
வினைத்தொகை                                           112