திரு அவதாரப் படலம் - 251
251.
அண்டர்கள் துயரமும். அரக்கர் ஆற்றலும்.
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை.
குண்டிகை. குடையொடும். குலவு நூல் முறைத்
தண்டொடு. பொலிதரு தடக் கையான்தனை. *
அண்டர்கள் துயரமும்- தேவர்களது (இதுவரை நீக்கப்படாத)
துயரமும்; அரக்கர் ஆற்றலும் - அரக்கர்களது (இதுவரை எவராலும்
வெல்லப்படாத) வலிமையும்; விண்டிடப் பொலிதரு வினைவலானனை
- விட்டு நீங்குவதற்குக் காரணமாக விளங்கும் செயல்திறம் வல்லவனை;
குண்டிகை குடையொடும் குலவு நூல் முறைத் தண்டொடும்
பொலிதரு - கமண்டலம் குடைகளுடன் பொருந்திய நூல் முறைப்படி
அமைந்த யோகதண்டத்துடனும் விளங்கிய; தடக்கையான் தனை -
தடக்கைகளையும் உடையவனை.
முன்பாட்டில் கூறிய சுற்றிய சீரைககுத்தக. குண்டிகை: குடை
பொருந்திய கைகளையும். நூல் முறைத் தண்டொடும் பொலிதரு
தடக்கையினையும் உடையவனாகத் திகழ்ந்தான் என்கிறார்.
‘‘அண்டர்கள் துயரமும். அரக்கர் ஆற்றலும் ஏக காலத்தில் விண்டிடப்
பொலி தருவினை’’ யாதெனின் ராமாவதாரத்துக்குக் காரணமாகவுள்ள
வேள்வியை நிறைவேற்றுதலாகிய தொழில் என்க.
குண்டிகை: கமண்டலம். குடை: உட்குடை வுள்ளதால் இப்பெயர்
பெற்றது தண்டு: யோக தண்டத்தைக் குறிக்கும் (திரிதண்டம்) தடக்கை
நீண்ட கை நூல்: சமய நூல்கள்.
பிறங்குவான்தனை. மூர்த்தியான் தனை. வினைவல்லாளனை.
தடக்கையான் தனை: ‘கண்களால் எதிர்ந்தனன்’ என்பது கொண்டு
பொருள் முடிவுபெற்றதாயிற்று 72
