திரு அவதாரப் படலம் - 208

bookmark

வசிட்டன் யாகம் செய்யின் குறை தீருமெனல்

208.

ஈது. முன் நிகழ்ந்த வண்ணம். என. முனி. இதயத்து
                                   எண்ணி.
‘மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்;
                                  ஏழ்- ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி.
தீது அற முயலின். ஐய! சிந்தைநோய் தீரும்’ என்றான்.
 
ஆறாவது     பாட்டுத் தொடங்கி. இருபத்து  எட்டாம்  பாட்டுவரை
கூறப்பட்ட  நிகழ்ச்சி  யாவும். திருமால் முன்பு  தேவர்களுக்கு  அருள்
செய்ததனை வசிட்டன் தனது மனத்தில் சிந்தித்தனவாகும்.

ஈதுமுன்  நிகழ்ந்தவண்ணம் -இது முன்பு  நிகழ்ந்த  செய்தியாகும்;
எனமுனி  இதயத்தெண்ணி - என்று.  வசிட்டன்  மனத்தில் நினைத்து
(மன்னனைப்பார்த்து);  மாதிரம் பொருத திண்தோள் மன்ன! - திசை
எங்கும்  சென்று  போர்  செய்து  வென்ற.  வலியதோள்களை  உடைய
மன்னனே!;  நீ வருந்தல்- நீ (புத்திரப்  பேற்றை எண்ணி)  வருந்தாதே;
ஏழ் ஏழ் பூதலம் முழுதும் தாங்கும்- ஈரேழாக எண்ணப்படும்  உலகம்
யாவையும்காக்கும்;   புதல்வரை அளிக்கும் வேள்வி - புத்திரர்களைத்
தரவல்ல  வேள்வியை;  தீதறு  முயலின்  ஐய! சிந்தை  நோய்தீரும்
என்றான்-  குற்றமின்றி  நீமுயன்று  செய்தால்  ஐய!  நின்மனத்  துயர்
நீங்கும் என வசிட்டன் கூறினான்.

வண்ணம்:  விதம். இதயம்: மனம். திருமால்  தேவர்களுக்கு அருளிய
திறத்தை   எண்ணிய   வசிட்டமுனி.   தயரதனை   நோக்கி   ஈரேழு
உலகையும்   காக்கவல்ல   புதல்வர்களைத்  தரவல்ல  வேள்வியை  நீ
முயன்று  செய்தால்  உனது  மனத்துயர்  தீரும்    என்றான்   என்பது
கருத்து.   மாதிரம்:   திக்குகள்.   பொருத:  போர்    செய்து  வென்ற.
திண்தோள்: வலிய தோள்.                                   29