திரு அவதாரப் படலம் - 198
198.
என்றனர். இடர் உழந்து. இறைஞ்சி ஏத்தலும்.
மன்றல் அம் துளவினான். ‘வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து. இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீ கேண்ம்’ என. உரைத்தல் மேயினான்.
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் - என்று
கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி. திருமாலைத் துதித்து
வணங்கிடவும்; மன்றல் அம் துளாவினான்- மணமும். அழகும்
உடைய துழாய் மாலையணிந்த திருமால்; வருந்தல் ‘வஞ்சகர்தம்
தலை அறுத்து தாரணிக்கு இடர் தணிப்பென்- (அத்தேவர்களை
நோக்கி) வருந்தாதீர்கள்! வஞ்சக அரக்கர்களின் தலைகளைத்
துணித்து உலகத்தின் துன்பத்தைத் தணிப்பேன்; ஒன்று நீர் கேண்ம்
என உரைத்தல் மேயினான் - அதற்குரியதொன்றைக் கேளுங்கள்
என்று சொல்ல. ஆரம்பித்தான்.
மன்றல்: மிகுமணம். வருந்தல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள்
எதிர் மறை. கேளும் என்பது கேண்ம் என வந்தது விகாரமும்
சந்தியுமாம். ‘ம்’: மகரக் குறுக்கம். வஞ்சகர்: மாயத்தொழில்
வல்லோர். 19
