திரு அவதாரப் படலம் - 190
190.
திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான்
மரகத மலையின் வழுத்தி நெஞ்சினால்
கரகமலம் குவித்து இருந்து காலையில்-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்.
திரை கெழு பயோததி துயிலும்- அலைகள் கெழுமிய பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும்; தெய்வ வான் மரகத மலையினை-
தெய்வத்தன்மை பொருந்திய உயர்ந்த மரகதமலை போன்ற
திருமாலை; நெஞ்சினால் வழுத்தி- மனத்தால் வணங்கித் துதித்து; கர
கமலம் குவித்து-தாமரை போன்ற கைகளைக் கூப்பி; இருந்த
காலையில்- (தியானித்து) இருந்தபோது; பரகதி உணர்ந்தவர்க்கு -
மேலான கதியிது என உணர்ந்து துதிப்பவர்களுக்கு; உதவு
பண்ணவன்- காலம் தாழ்த்தாது உதவும்திருமால்
‘வந்து தோன்றினான்’ என்ற அடுத்த பாடல் தொடருடன் பொருள்
முடிவு பெறும். கெழு: கெழு முதல் (பெருகியிருத்தல்) பயம்: பால்.
உததி: கடல்; பயோதறி: பாற்கடல். மரகதம்: பச்சை நிறமணி. மரகத
மலை: பச்சை மாமலை போன்ற திருமால் உணர்த்தும் உவமையாகு
பெயர். பரகதி: மேலாம்துணை. பண்ணவன்: மெய்ஞ்ஞானியாம்.
நெஞ்சினால் வழுத்தல்: மனத்தால் துதித்தல். கரகமலம் குவித்தல்:
கைகளால் தொழுதல். கரகமலம்: உருவகம். 11
