திரு அவதாரப் படலம் - 188
188.
பாகசாதனன்தனைப் பாசத்து ஆர்த்து. அடல்
மேகநாதன். புகுந்து இலங்கை மேய நாள்.-
போக மா மலர் உறை புனிதன்.- மீட்டமை.
தோகைபாகற்கு உறச் சொல்லினான்அரோ.
அடல் மேக நாதன்- (இராவணனது மகனாகிய) வலிமை மிகுந்த
மேக நாதன் (இந்திரசித்து) எனுமரக்கன்; புகுந்து பாக சாதனன்
தனை- (அமராவதி நகரக்குள்) புகுந்து தேவர்கள் தலைவனான
இந்திரனை; பாசத்து ஆர்த்து - கயிற்றால் கட்டி; இலங்கை மேய
நாள்- இலங்கைக்குக் கொண்டு போன போது; போக மா மலை
உறை புனிதன் - இன்பம். தரும் அழகிய தாமரையில் வாழும்
புனிதனாகிய பிரமன். தான்; மீட்டமை தோகை பாகற்கு உற -
அந்த இந்திரனை மீட்டுவந்ததை உமையொருபாகனாகிய
சிவபெருமானுக்குப் பொருந்த; சொல்லினான்- எடுத்தியம்பினான்.
பாக சாதனன்: இந்திரன் (புண்ணிய பலன்களை உயிர்கள் பெற
உதவுபவன்) மேகநாதன்: பிறந்ததும் மேகத்தைப் போல முழங்கியதால்
இப்பெயர் பெற்றான் என்பர். இந்திரனைப் போரில் வென்றபின் பெற்ற
சிறப்புப் பெயரே “இந்திரசித்து” என்பது. மேகநாதனிடமிருந்து
இந்திரனைத் தான் மீட்டுவந்ததை. நான்முகன். சிவன்
முதலானவர்களுக்குச் சொன்னான் என்பது கருத்து. 9
