தியொடோர் ரோசவெல்ட்

தியொடோர் ரோசவெல்ட்

bookmark

தியொடோர் ரோசவெல்ட் (Theodore Roosevelt, அக்டோபர் 27, 1858-ஜனவரி 6, 1919)  26ஆவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். பகட்டான தோற்றத்திற்கும், இவரது சாதனைகளுக்கும் இவரின் லட்சிய ஆசைகளுக்கும் மற்றும் தலைமை பண்பிற்காகவும் திட்டமிட்ட செய்கைகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்ட இவர் குடியரசுக் கட்சியின் சார்பாக நியூயார்க் மாநிலத்திலும் ஆளுநராக இருந்தார். எசுப்பானிய-அமெரிக்கப் போரில் இராணுவத் தளபதியாக இருந்தார்.

இவர் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். இவர் சிறுவயதில் இருந்தே ஆஸ்துமாவினால் பீடிக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தளர்வுறாத முயற்சிகளால் இவரது குறைகளைக் களைந்தவர். இவர் ஒரு இயற்கை விரும்பி. ஹார்வர்ட் யூனிவெர்சிட்டியில் பயின்ற இவர் கடற்படையில் அதீத ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

இவரின் நினைவில் டெடி கரடிக்குட்டிகளுக்குப் பெயரிடப்பட்டது. 1906 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்