தியாகி குமாரசாமி
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தது அனுமன் தீர்த்தம் எனும் கிராமம். இங்கு குமாரசாமி எனும் தியாகி வசித்து வந்தார். இவர் தனது 15 ஆம் வயதிலேயே விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டவர். இவர் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றார். இவர் புனே, பம்பாய், சென்னை, பெல்லாரி, சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் இருந்திருக்கிறார்.
