தாடகை வதைப் படலம் - 372

bookmark

சுந்தனும் தாடகையும் மணக்களிப்பெய்துதல்

372.    

‘ “காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்” என. இயக்கனும் அணங்கு அனாளும். வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்.
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.
 
காமன்   -    மன்மதன்; இயக்கன் - சுந்தன்; அணங்கு - தெய்வ
மகள்;அனாளும் -  அன்னாளும்; யாமம் - இரவு; ஈறு - முடிவு; சலதி
- கடல்;  பெருங்களி - பெரும் களிப்பு; தாம் உறு - தாம் உற்ற. 20.7