தாடகை வதைப் படலம் - 371
சுகேது தன்மகளைச் சுந்தனுக்கு மணமுடித்தல்
371.
‘ஆயவன் அருள்வழி. அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு. “இவட்கு
ஆயவன் யார்கொல்?” என்று ஆய்ந்து. தன் கிளை
நாயகன். கந்தன் என்பவற்கு நல்கினான்.
ஆயவன் - அந்த பிரமன்; அலர்ந்த - மலர்ந்த; சேயவள் -
திருமகள்; செவ்வி - தன்மை; இவட்கு ஆயவன் - இவளுக்கு உரிய
கணவன்; நாயகன் - தலைவன்; என்பவற்கு - என்பவனுக்கு;
நல்கினான் - தந்தான். 20-6
