தமிழ்மொழி வாழ்த்து

தமிழ்மொழி வாழ்த்து

bookmark


தான தனத்தன தான தனத்தன தானன தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!    1

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!    2

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!    3

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!    4

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!    5

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!    6

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!    7

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!8