தமிழ்நாட்டின் கடலோர நீளமும் மீன்பிடித் தொழிலும்

bookmark

கோரமண்டல் கடற்கரை சென்னை முதல் கோடியக்கரை வரை 357.2 நீளம் கி.மீ கொண்டது.

பாக் சலசந்தி கோடியக்கரை முதல் பாம்பன் வரை    293.9 நீளம் கி.மீ கொண்டது.

மன்னார் வளைகுடா பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை 364.9 நீளம் கி.மீ கொண்டது.

மேற்கு கடற்கரை கன்னியாகுமரி முதல் நீரோடி வரையில் 60.0 நீளம் கி.மீ கொண்டது.

அத்துடன் பண்டைய காலத்தில் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.

தமிழக மீனவர்களின் சமூக அமைப்பு:-

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். அவை பின்வருமாறு:-

(அ) வலையர்

(ஆ) பரவர்

(இ) கடையர்

வலையர்

வலையை வைத்து மீன்பிடித்ததால் அவர்கள் வலையர் எனப்பட்டனர்.

பரவர் அல்லது பரதவர்

பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன் பிடித்ததால் அவர்கள் பரதவர் எனப்பட்டனர்.

கடையர் அல்லது கரையர்

இவர்கள் கரை ஓரங்களில் மீன் பிடித்ததாலும் கடல் சார்ந்த கரைதொழில்கள் செய்ததால் (கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்ததால் கரையர் எனப்பட்டனர் பின்பு கரையர் மருவி கடையர் எனவாகியது. இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர், இன்றளவும் இம்மக்கள் கடற்கரை ஓரங்களில் வசித்து வருகின்றனர் இவர்கள் கரையர் எனப்பட்டதற்கு சான்றாக இராமேஸ்வரத்தில் கரையாதெரு என்ற ஊர் உள்ளது. (கரையர் தெரு கரையாதெருவாக மருவியது).

இன்றைய தமிழ் மீனவர் பிரச்சனை:-

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் அண்மைக் காலங்களில் நடைபெற்று வருவது, கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

மூலம்

பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.