தமிழகத்தின் கடையெழு வள்ளல்கள்

bookmark

சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன. அவ்வாறு கடையேழு வள்ளல்களின் பெயர்கள் பின்வருமாறு

1.     பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்

2.    பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்

3.    காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)

4.    ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்

5.    அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்

6.    நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவன்)

7.    ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.

வாருங்கள் இன்னும் இவர்களைப் பற்றி விரிவாகக் காணலாம்