ட்ரீட்மெண்ட்

bookmark

1. "எதுக்குடா எதிர்க்கட்சித் தலைவரை கடிச்சு வச்சீங்க?" 

"நீங்கதானே தலைவரே அவர் மேல "பல்முனை" தாக்குதல் தொடர வேண்டுமுன்னு மேடையில அறிவிச்சீங்க!"

வி.சகிதாமுருகன்.

2. "இனிமேல் நீங்க அதிகமா நடக்கணும்!"

"உங்ககிட்டே ட்ரீட்மெண்டுக்கு வந்த பின்னாடி எங்கிட்டே இருந்த காரை வித்துட்டு இப்பல்லாம் எங்கே போனாலும் நடந்தேதான் போறேன் டாக்டர்!"

அரூர்.மு. மதிவாணன்.

3. "நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்..."

"அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க...!"

உஷா சாரதிடேச்சு

4 "எருமை வெளியே போகும்போது தன் ஆண் கன்றிடம் என்ன சொல்லிட்டுப் போகும்?"

"BI SON"