ஜி. சுப்பிரமணிய ஐயர்

bookmark

ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய அய்யர் (Ganapathy Dikshitar Subramania Iyer: ஜனவரி 19, 1855 - ஏப்ரல் 18, 1916) இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர்; செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

ஹாஜி முகமது மெளலானா சாகிப் என்ற மதுரை மௌலானா சாகிப் (1886 - 1957) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இசுலாமியர். சிறந்த பேச்சாளர். அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டவர். 1921 - இல் நிலக்கோட்டையில் நடந்த கள்ளுக்கடை மறியல், 1932- இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்தவர். மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.

ஜி. சுப்பிரமணிய ஐயர் அவர்களின் பிறப்பும் இளமையும்:-

காங்கிரஸ் பேரியக்கம் தோன்றி ஓராண்டு கழிந்த போது மதுரை முனிச் சாலையில் வாழ்ந்த ஹாஜி முகம்மது அசனுதீன் - மாஜான் பீவி இணையருக்கு 1886 ஆம் ஆண்டு ஹாஜி முகம்மது பிறந்தார். இவரது குடும்பம் இசுலாமிய நெறிமுறைகளைப் பின்பற்றும் இறைப்பற்று மிக்க குடும்பமாகும். தனது தொடக்கக் கல்வியை ஆங்கில வழிக்கல்வி மூலம் பெற்ற ஹாஜிமுகம்மது பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். முனிச்சாலைப் பகுதியில் சௌராட்டிர சமூகத்தவர் மிகுதியாக இருந்த காரணத்தால் அவர்களுடன் பழகிய ஹாஜி முகம்மது, மேடையேறி சௌராட்டிர மொழியில் பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப் பற்றும் மிக்க காரணத்தால் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை ஹாஜிமுகம்மது படித்து அன்றாடம் தேச நிகழ்ச்சிகளை ஊன்றிக் கவனித்து வந்தார். ஆங்கிலேயக் கப்பல் கம்பனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும் மௌலானாவின் தேசப்பற்று ஆர்வத்தை அதிகமாக்கின.

1908- மார்ச் 13-ஆம் நாள் விபின் சந்திரபாலரின் பிறந்த நாள் விழா நெல்லையில் கொண்டாடப்பட்ட போது பிரித்தானியரின் அடக்கு முறையும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் முகம்மது யாசீன் என்ற இளைஞர் இறந்ததும் மௌலானாவைப் பெரிதும் கவலைக்குள் ஆழ்த்தியது. அடக்கு முறையில் ஆத்திரம் கொண்டார். துப்பாக்கி ஏந்தி வெள்ளையனை விரட்டும் வீரனாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டார். இவ்வாறு இளமையிலேயே தனது உணர்வுப் பூர்வமான ஆர்வத்தை நாட்டு நலனுக்காக அமைத்துக் கொண்டார். இவர் சுல்தான் பீவி என்ற மங்கையை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.

நீலகண்ட பிரம்மச்சாரி:-

நீலகண்ட பிரம்மச்சாரி (Neekakanda Brahmachary) (4 திசம்பர் 1889 - 4 மார்ச் 1978) 1911 ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட போது தான் நீலகண்டனின் பெயர் நாடு முழுவதும் பிரபலமானது.

இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும் பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர்.

வாழ்வின் பிற் பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில், தனது 88 ஆவது வயதில் 4 மார்ச் 1978இல் காலமானவர்.

நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் இளமைக் காலம் :-

சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் – சுப்புத்தாயி தம்பதிகளுக்கு 4 டிசம்பர் 1889 ஆம் ஆண்டில் மூத்த மகனாகப் பிறந்தவர் நீலகண்ட பிரம்மச்சாரி. சீர்காழி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர்.

இந்திய விடுதலை இயக்கத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி:-

1905 ல் லார்டு கர்சான் வங்காளத்தை இரண்டாகப் பிரித்த போது, நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அதே காலத்தில் நீலகண்டர், இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கத்தைத் ' 1907ஆம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். அதனால் நீலகண்டனை ஆங்கிலேயே உளவுக் காவல் துறையினர் இரகசியப் கண்காணிக்கத் தொடங்கினர். இவர் தன் பெயரோடு 'பிரம்மச்சாரி' எனும் பெயரை இணைத்துக் கொண்டார். "சூர்யோதயம்"எனும் பத்திரிகையை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தீவிர குணம் படைத்த வ. உ. சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்பு கொண்டவர்.

ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநாதன், வனத்துறையில் வேலை பார்த்து வந்ததால் தனக்கு ஒரு மான் தோல் வேண்டும் என்று நீலகண்டன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியதால் வாஞ்சிநானுக்கு துணை நின்றதாக நீலகண்டனும் கைது செய்யப்பட்டார். ஆஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்காரவேலரின் தொடர்பால், "பொது உடமைக் கட்சியின் துண்டு பிரசுரங்கள் வெளியிட்ட குற்றத்திற்காக 1922 இல் பத்து ஆண்டுகள் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார் நீலகண்ட பிரம்மச்சாரி.

நீலகண்ட பிரம்மச்சாரி துறவறம் புகுதல் :-

சிறை வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931 ஆம் ஆண்டில் துறவறம் பூண்டு, டிசம்பர் 1933 இல் மைசூர் சமஸ்தானத்தில் நந்தி கிராமம் அருகே சென்னகிரியில் ஓம்கார் எனும் பெயரில் ஆசிரமம் அமைத்தார். இவர் மெய் ஒப்புதல், உபதேசம் ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.

நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் மறைவு :-

தனது 88 வது வயதில் 4 மார்ச் 1978 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவால் நீலகண்ட பிரம்மச்சாரி காலமானார்.