சேரர்கள்

bookmark

பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். இதன் மூலம் சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக் கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழகத்தின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும் கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சேரர்களின் எல்லைகள்:

சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

கேரளதேசம் சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கர்னாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும்.

இருப்பிடம்:

இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.

மன்னர்கள்:

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

மூன்றாம் கழகக்காலச் சேரர்கள்:

கழக நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. குறிப்பாக, மூன்றாம் கழக நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதன் படி கீழ்க்கண்ட சில சேர அரசர்களைப் பற்றியத் தகவல்கள் கிடைக்கின்றன.

மூன்றாம் கலகக்காலச் சேரர்கள்

பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்    கி.பி. 45-70

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்    கி.பி. 71-129

பல்யானைச் செல்கெழுகுட்டுவன்    கி.பி. 80-105

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்    கி.பி. 106-130

சேரன் செங்குட்டுவன்    கி.பி. 129-184

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்    கி.பி. 130-167

அந்துவஞ்சேரல் இரும்பொறை    (காலம் தெரியவில்லை)

மாந்தரஞ்சேரல் இரும்பொறை    (காலம் தெரியவில்லை)

வாழியாதன் இரும்பொறை    கி.பி. 123-148[சான்று தேவை]

குட்டுவன் இரும்பொறை    (காலம் தெரியவில்லை. இவனைப் பற்றிய செய்திகளும் கிடைக்கவில்லை)

பெருஞ்சேரல் இரும்பொறை    கி.பி. 148-165

இளஞ்சேரல் இரும்பொறை    கி.பி. 165-180

பெருஞ்சேரலாதன்    கி.பி. 180

கோப்பெருஞ்சேரல் இரும்பொறை    (காலம் தெரியவில்லை)

குட்டுவன் கோதை    கி.பி. 184-194

மாரிவெண்கோ    காலம் தெரியவில்லை

வஞ்சன்    காலம் தெரியவில்லை

மருதம் பாடிய இளங்கடுங்கோ    காலம் தெரியவில்லை

கணைக்கால் இரும்பொறை    காலம் தெரியவில்லை

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை    காலம் தெரியவில்லை

பிற்காலச் சேரர்கள்

பெருமாள் பாஸ்கர ரவிவர்மா    கி.பி. 8ஆம் நூற்றாண்டு