சேரமான் மாரிவெண்கோ

bookmark


சேரமான் மாரிவெண்கோ சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். சங்க காலத் தமிழக வரலாற்றிலேயே இவன் காலத்தில்தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது. பாரி வள்ளலை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டனர் என்பது மற்றொரு நிகழ்ச்சி.

ஞாயிறு, திங்கள், தீ இவற்றின் ஒளிகளை (பகல் வெளிச்சம், நிலா வெளிச்சம், விளக்கு வெளிச்சம்) ஒருசேரக் காண முடியாது. சோழன் சூரியகுலம், பாண்டியன் சந்திர-குலம், சேரன் அக்கினிக்குலம் அதுபோல் இருந்த தமிழ்நாட்டு அரசர்களின் நிலைமை மாறி இவர்கள் பார்ப்பார் வளர்க்கும் முத்தீ போல ஓரிடத்தில் இருந்தார்களாம் (பாரி என்னும் பெயர் கொண்ட வள்ளலை அழிக்க).