சுவற்றில் ஆணி அடிக்கும் போது

bookmark

டாக்டர், எங்கப்பாவுக்கு இன்னும் பத்து நாள் கழிச்சி ஆபரேஷன் பண்ணுங்க..."

"ஏன்"

"சொத்துக்களை என் பேருக்கு இன்னும் மாத்தி எழுதல..."

பெரியவர்: படிக்கட்டில் தொங்கும் தம்பிகளா, உள்ளே வாங்கப்பா...

மாணவர்கள்: ஏன் பெருசு?...

பெரியவர்: பஸ்சுக்குள்ளே நாம ஏறினாலும் நம்ம மேல பஸ் ஏறினாலும் 'டிக்கட்' வாங்கப் போறதென்னவோ நாமதானே?...

"இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கயாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்களே நீங்க என்ன ஜோசியரா?"

"இல்ல, இந்த பஸ் டிரைவர்."

அம்மா: எதற்காக செல்லம் அழுதுக்கிட்டே வர்ற...?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுவிட்டதும்மா.. 

அம்மா: இதற்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சி இருப்பேன்.

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்!

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளி மருத்துவரிடம் கூறுகிறார்...

"டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை. உங்களத்தான் நான் தெய்வமா நினைக்கிறேன்..."

"அப்போ... ஆபரேஷன் முடிஞ்தும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க..?"