சுரங்கப்பாதை

bookmark

1. "இந்த சினிமாதான் நம்மளை சேர்த்து வச்சது..." "அவ்வளவு நல்ல காதல் படமாங்க...?" 

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமத்தான், உன்ன பொண்ணு பார்க்க வந்தேன்...!"

ப.உமா மகேஸ்வரி

2. "மன்னா, போர் நடக்கப் போகிறது என்று நினைக்கிறேன்..."

"எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?"

"நமது படை வீரர்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் லீவ் கேட்கிறார்கள்..!?

இ.அசோக்

3. "வயிறு ரொம்ப எரியுது டாக்டர்..."

"எப்பத்துலேயிருந்து..?"

"நீங்க நர்ஸ்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேச ஆரம்பிச்சதிலேர்ந்து!"

எஸ்.எஸ்.பூங்கதிர்

4. "ஏங்க பிச்சைக்காரனை எல்லாம் வீட்ல உட்கார வச்சி சோறு போடச் சொல்றீங்க?"

"ஏய்! சத்தம் போடாதே, அவரு என்னை வச்சி படம் எடுத்த "தயாரிப்பாளர்" டி!"

ஸ்டோர் ஸ்ரீனிவாசன்

5. "வாஸ்து நிபுணரை மன்னர் ஏன் சிறையில் அடைக்கச் சொன்னார்?"

"அவர் சொன்ன வாஸ்துப்படி சுரங்கப்பாதை அமைச்சதுல, பாதை எதிரி நாட்டு சிறைச் சாலையில் போய் முடிஞ்சதாம்..!"