சுத்தானந்த பாரதியார்

bookmark

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

சுத்தானந்த பாரதியார் வாழ்க்கைக் குறிப்பு:-

சுத்தானந்த பாரதியார் என பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக் கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11 இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு :-

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சுத்தானந்த பாரதியார் பெற்ற விருதுகள்:-

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், "பாரத சக்தி மகாகாவியம்"அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்த போது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.

சுத்தானந்த பாரதியார் எழுதிய நூல்கள்:-

பாரத சக்தி மகா காவியம், யோக சித்தி, அருட்செல்வம், கவிக் கனவுகள், கீர்த்தனாஞ்சலி, நவரஸ நடனாஞ்சலி, பாரத கீதம், தமிழக கனல், ஆத்ம சோதனை, ஏழைபடும் பாடு, இளிச்சவாயன், அன்னை, இவளும் அவளும், நாகரிகப் பண்ணை, இல்லற ஒழுக்கம் போன்ற கணக்கில் அடங்காத நூல்களை இவர் எழுதி உள்ளார்.