சீத்தலைச் சாத்தனார்

சீத்தலைச் சாத்தனார்

bookmark

வாழ்க்கை வரலாறு

சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். ‘மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்’ என்று இவர் குறிப்பிடப்படுகிறார். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர். சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். சீத்தலை என்பது சீர்தண்டலை என்பதன் சுருக்கம். மதுரையிலே வாழ்ந்தவர். கூல வாணிகம் செய்தவர். கூலம்(வைக்கோல்) என்பது நவதானியம் அறுவடைக்குப் பின் அதன் தாள். இவர் பல தானிய மணிகளின் வணிகம் செய்து இருக்கிறார்.

இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை இவரது மணிமேகலைக் காப்பியத்தால் அறியலாம். புத்த மதக் கருத்துக்களை ஆழ்ந்த அனுபவ முறையில் கூறியுள்ளார். மணிமேகலை இயற்றிய சாத்தனாரோடு நட்புக் கொண்டிருந்த புலவர் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் ஆவார். இந்தச் சாத்தனார் நன்னூற் புலவன், தண்டமிழ்ச் சாத்தன் என்று போற்றப்படுகிறார். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 10 உள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் புறத்திணைப் பாடல். ஏனையவை அகத்திணைப் பாடல்கள் ஆகும்.