சித்திரகூடப் படலம் - 2155
2155.
‘கழித்த செம்பொனின் தொளைபுரை
உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு
இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர்
அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக
நறு மலர் - காணாய்!
அழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே! -
கழியாகச் செய்யப்பெற்றசெம்பொன்னால் ஆகிய தொளையை ஒத்திருக்கின்ற
தொப்புளை உடைய இனிய வாழ்க்கைத்துணைவியே!; கோலம் அழித்து
மேவிய அரம்பையர் - (அருவியில் நீராட வந்து)தம்முடைய பழைய
கோலத்தைக் களைத்து நீராடிய அரம்பை மாதர்கள்; அறல்புரை கூந்தல்
கழித்து நீக்கிய - தமதுத கருமணலை ஒத்த கூந்தலிலிருந்து எடுத்து
எறிந்த; கற்பகநறுமலர் - கற்பக மரத்தின் மணமுள்ள மலர்கள்; மாமணி
கொழித்த அருவியொடு இழிவன -சிறந்த இரத்தினங்களைக்
கொழித்துக்கொண்டு வருகின்ற மலை அருவியோடு இறங்கிவருவனவற்றை;
காணாய் -.
கழியும் தொளையுமாகச் செம்பொன்னால் செய்தவை கொப்பூழுக்கு
உவமையாம். தேவஉலகத்தில் உள்ள மாதர் கழற்றி எறிந்த மாலைகளை
வானுற ஓங்கி வளர்ந்திருக்கின்ற மலைஅருவிகள் அடித்துக்கொண்டு
வருகின்றன என்பது கருத்து. 21
