சந்திரசேகர சரசுவதி
வாழ்க்கை வரலாறு
இளமை வாழ்வு
தமிழ்நாட்டின் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் மே 20, 1894ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். சுவாமிநாதன் தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
வரலாறு:
காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த மடத்தின் அலுவல்முறை வரலாற்றின்படி ஆதி சங்கரர் இந்த மடத்தை நிறுவியதாகவும் அவரைத் தொடர்ந்து 69ஆவது மடத்தலைவராக பொறுப்பாற்றுவதாகவும் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து உள்ளதாகவும் நிறுவப்படுகிறது. மடத்தின் வேறுசில பரப்புரைகளிலும் ஆதி சங்கரர் காஞ்சிக்கு வந்திருந்து சர்வக்ஞா பீடம் என்ற மடத்தை நிறுவியதாகவும் இங்கு மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பிற மூலங்கள் சங்கரரின் இறப்பு இமாலயத்தில் கேதார்நாத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன.
வேறு சிலர் இந்த மடம் அண்மையில் 18ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக நிறுவப்பட்டு தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கியது என்கின்றனர். கும்பகோணத்தில் இருந்த மடத்தலைவர்கள் காஞ்சி காமாட்சி கோவிலின் நிர்வாகத்தை கைக்கொள்ளவே தங்கள் மடத்தை 1842க்கும் 1863க்கும் இடையில் காஞ்சிக்கு இடம் பெயர்த்தனர். இதுவே காஞ்சி மடத்தின் துவக்க காலம் என்றும் கூறுகின்றனர்.
காஞ்சி மடத்தின் கூற்றின்படி 18ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்ததற்கான காரணம் அய்தர் அலியின் படையெடுப்பு ஆகும். மேலும் அவர்கள் ஆதி சங்கரர் வந்தமைக்கும் மடம் 2500 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டிருப்பதற்கும் காஞ்சியைச் சுற்றியுள்ள கோவில்களில் கல்வெட்டுகள் தொல்லியல் சான்றுகளாக உள்ளதாக கூறுகின்றனர். மடத்தின் கூற்றுப்படி காஞ்சியிலுள்ள சன்னிதி கோவில் தெரு கட்டிடம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாக நிறுவப்பட்டாலும் இதனை மறுப்போரும் உள்ளனர்.
சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பீடாதிபதியாக பல்லாண்டுகள் இருந்தார்.