சடைய நாயனார்

bookmark

திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் 'சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

"சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே" என்று மறை நூல்கள் இவரைப் புகழுகின்றன. இவர் சிவ அடியார்களை உபசரித்தார். சிவனுக்கு தொண்டு செய்தார். அதன் பலனாய் இறுதியில் சிவ பதம் அடைந்தார். சடையனார்  நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை என்று அறியப்படுகிறது.