கொசு
கொசு
பொதுவாக நம்மை கடிப்பது ஆண் கொசுக்கள் அல்ல. பெண் கொசுதான். பெண் கொசு தன் முட்டை உற்பத்திக்காக நம் இரத்தத்தில் இருக்கும் புரதம், இரும்புச் சத்து போன்றவற்றை தேடி வருகிறது.
ஆண் கொசு மலர்த்தேன் உண்ணும்.
ஏடிஸ் கொசு மட்டுமே பகல் நேரத்தில் கடிக்கும் மற்ற கொசுக்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் கடிக்கும்.
மனிதர்களை சில கொசுக்கள் கடிப்பதில்லை. மாறாக அவை பல்லி, தவளை, பாம்பு போன்றவற்றை கடிப்பதில் ஆர்வம் காட்டும்.
மனிதனும் பிற விலங்குகளும் உருவாக்கும் கார்பன்டை ஆக்சைடின் உதவியைக் கொண்டு இவை 75 அடி தொலைவிலேயே தன் இரத்த உணவை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றன.
இவற்றிற்க்கு பற்கள் கிடையாது.
இவற்றால் சுமார் 40 மைல்கள் வரை பயணிக்க முடியும்
இவற்றின் வேகம் மணிக்கு 1.5 மைல் ஆகும்
